Enable Javscript for better performance
இளைஞரைக் கொன்ற சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    இளைஞர் கொலை வழக்கில் அண்ணன்- தம்பி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 
    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகேயுள்ள அம்மையப்பன் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் இளையராஜா (28). திமுகவைச் சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன்கள் சின்னமணி (எ)பிரேம்நாத் (20), பிரேம் ஆனந்த் (28). இவர்களுக்குள் அரசியல் ரீதியாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2007 ஜனவரி 9-ஆம் தேதி அம்மையப்பன் மீன் கடை அருகில் நின்றுகொண்டிருந்த இளையராஜா, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 
    இதுகுறித்து பிச்சமுத்து அளித்த புகாரின்பேரில், கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து பிரேம்நாத், பிரேம்ஆனந்த்  ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் திங்கள்கிழமை இறுதி வழக்கு விசாரணையில், இளையராஜாவை கொலை செய்த பிரேம்நாத், பிரேம் ஆனந்த் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பிரேம்நாத், பிரேம் ஆனந்த் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai