Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் செயல்பட வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் செயல்பட வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th April 2018 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி நதி நீர் பிரச்னையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மன்னார்குடி வழக்குரைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மன்னார்குடியில் திங்கள்கிழமை புதிதாக தொடங்கப்பட்ட, உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்,  உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மூத்த வழக்குரைஞர் ஏ. செல்வராஜ் தலைமை வகித்தார்.
     தீர்மானங்கள்: மன்னார்குடி சிவில் வழக்குரைஞர்கள் சங்கம் என்பதை திருத்தம் செய்து, மன்னார்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கம் என புதிய பெயரில் சங்கத்தை செயல்படுத்துவது. மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தமிழகஅரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து , உடனடியாக பணியை தொடங்க வேண்டும். 50 ஆண்டுகள் பணி செய்த மூத்த வழக்குரைஞர்களுக்குப் பாராட்டு விழா நடத்துவது. குழுக் காப்பீட்டை உடனடியாக தொடங்குவது 
    இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்க தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
     தொடர்ந்து சங்கத்தின் நிகழாண்டுக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக கே. கல்யாணராமன், செயலராக வி. தமிழ்வாணன், பொருளாளராக ஜி. வீரக்குமார், துணைத் தலைவர்களாக ஜெ. நாகையன்,பி. மல்லிகா, இணைச் செயலர்களாக வி.கே. கோபாலகிருஷ்ணன், எஸ். நடேஷ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
    மூத்த வழக்குரைஞர்கள் என். சுவாமிநாதன், எஸ். உதயகுமார் உள்ளிட்டோர் புதிய உறுப்பினர்களை வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், வழக்குரைஞர்கள் ஆர்.பிரகலாதன், சு. சிங்காரவேலு உள்ளிட்டோர்
    கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai