Enable Javscript for better performance
கொரடாச்சேரி ஒன்றியத்தில் மு.க. ஸ்டாலின் நடைப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடைப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழு, செவ்வாய்க்கிழமை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வந்தடைந்தது. 
    இதைத்தொடர்ந்து, அகரத்திருநல்லூர் காட்டூருக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், அங்குள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் காட்டூர், திருக்கண்ணமங்கை, அம்மையப்பன், குளிக்கரை, தேவர்கண்டநல்லூர் ஆகிய இடங்களில் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். 
    முன்னதாக, பவித்திரமாணிக்கம் வந்த ஸ்டாலினுக்கு கொரடாச்சேரி தெற்கு ஒன்றியச் செயலாளர் சேகர் (எ) கலியபெருமாள் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, வரவேற்பளித்தனர்.
    நடைப்பயணத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஐ(எம்) கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் லாசர், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பொன்முடி, எ.வ. வேலு, சேகர்பாபு, மதிவாணன், மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் சென்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai