Enable Javscript for better performance
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசியல் பாகுபாடின்றி செயல்படுவோம்: மு.க. ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    திமுக ஆட்சிக்கு வந்தால் அரசியல் பாகுபாடின்றி செயல்படுவோம்: மு.க. ஸ்டாலின்

    By DIN  |   Published on : 11th April 2018 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் மாநில பிரச்னைகளில் அரசியல் பார்க்காமல் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவோம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மன்னார்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். 
    அப்போது, மேலராஜ வீதி, தந்தை பெரியார் சிலை ஆகிய இடங்களில் மு.க . ஸ்டாலின் பேசியது: காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தும், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி
    வருகிறது.
    தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டிவிடக் கூடாது  என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவுள்ளதாக தெரியவருகிறது. அப்படி நாங்கள் கைது செய்யப்பட்டாலும், எந்த தொய்வும், சோர்வும்  இல்லாமல் தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவார்கள் என்றார்.
     தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மதிமுக மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலர் அரூர் சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலர் ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ லாரன்ஸ் உள்ளிட்டோர் பேசினர்.
     இதில் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலர் காவிரி எஸ். ரெங்கநாதன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, மாநில முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ. வேலு, க. பொன்முடி, எம்எல்ஏக்கள் மா. சுப்ரமணியன், டி.ஆர்.பி. ராஜா, ப. ஆடலரசன், மகேஷ் பொய்யாமொழி, திமுக மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன்,  திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    திருத்துறைப்பூண்டியில்...
    திருத்துறைப்பூண்டி காமராஜர்சிலை அருகே பேசிய மு.க. ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத சூழ்நிலை உருவானதற்கு மத்திய, மாநிலஅரசுகளே காரணம். மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றார்.
    இந்த கூட்டத்தில் திமுக நகரச் செயலர்ஆர் .எஸ். பாண்டியன், ஒன்றியச் செயலர் பிராகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai