Enable Javscript for better performance
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கண்டனம் தெரிவித்து, முத்துப்பேட்டையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி. ராஜேந்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி செல்லத்துரை வரவேற்றார்.
     இதில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் வீரமணி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வீரசேகரன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் அமிர்தலிங்கம், ஜனநாயக மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் வாசுகி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்தின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai