Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வடமாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில், 11 தலித்துகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து நீடாமங்கலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சோம. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. பழனிவேல், கே. கைலாசம், நகரச் செயலாளர் சி.டி. ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ரெத்தினம், விவசாயச் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். நாகூரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai