Enable Javscript for better performance
பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் ஒன்றியம், வடுவூர் சாத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்மணி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜூலியெட்ஜெயசிந்தாள், கூடுதல் ஆணையர் ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ரவி, அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் குணசேகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் பொன்முடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    கிராமப் பிரமுகர்கள் சிவானந்தம், பொன்னுசாமி. ஜெயராஜ், மருதமுத்து, ஞானசேகரன், சக்திவேல், கணேசன், சீராளன். சிவகுமார், கோதண்டராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    தலைமையாசிரியை சித்தரவள்ளி வரவேற்றார். இடைநிலை ஆசிரியை மஞ்சுளா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் குணசீலன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai