Enable Javscript for better performance
பி. சீனிவாச ராவ் பிறந்த நாள்: உருவப்படத்துக்கு மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    பி. சீனிவாச ராவ் பிறந்த நாள்: உருவப்படத்துக்கு மரியாதை

    By DIN  |   Published on : 11th April 2018 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டியில் உள்ள பி. சீனிவாச ராவ் நினைவிடத்தில் உள்ள அவரது திருஉருவப் படத்துக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    பொதுவுடமை இயக்கப் போராளி பி. சீனிவாசராவ் கர்நாடகத்தில் பிறந்தவர் என்றாலும் கீழத் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர உயிர் தியாகம் செய்தார். இவருக்கு, திருத்துறைப்பூண்டியில் அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
    இவரது பிறந்த தினத்தையொட்டி மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் செல்வசுரபி,திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai