Enable Javscript for better performance
மன்னார்குடியில் அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 11th April 2018 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில், தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களை துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
    தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், கல்லூரியின் நுழைவு வாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க கிளைத் தலைவர் பேராசிரியர் கோ. காமராஜ் தலைமை வகித்தார்.
    கோரிக்கைகள்: தமிழ்நாட்டில் இதுவரை அண்ணா பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களை வெளிப்படைத் தன்மையுடன் துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின் படி, காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதம் செய்யாமல் மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். மக்களுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில்
    வலியுறுத்தப்பட்டன. 
    தமிழ்த் துறைத் தலைவர் ந. தனராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கல்லூரி முதல்வர் சோ. ரவி, கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தஞ்சை மண்டலப் பொருளாளர் கண்ணன், கிளைச் செயலர் அ. முருகானந்தம், இணைச் செயலர் ரா. சிவக்குமாரன், கௌரவப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai