Enable Javscript for better performance
மாவட்ட நூலகத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட நூலகத்தில் 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு

    By DIN  |   Published on : 11th April 2018 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்கள் 100 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 
    நூலக வாசகரும் ஓய்வுபெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருமான ஐ. தெட்சிணாமுர்த்தியின் முயற்சியில் மாவட்ட நூலகத்தில் திருவாரூர் மோசஸ் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ரெ. கலையரசி, நூலகர் மா. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் பெ.செல்வராசு கூறியது: திருவாரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களை உறுப்பினராக்கும் முனைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் மாவட்ட  அளவில் 5000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வாசிப்பின் மீது பற்றுள்ள செல்வந்தர்கள், வணிகர்கள் தாங்களாக முன்வந்து பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்காக சிறு தொகையை செலுத்தி அவர்களை உறுப்பினராக்கலாம்
    என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai