Enable Javscript for better performance
மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நீடாமங்கலம் வந்தடைந்த திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான பேரணிக்கு திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பில் தொடங்கியப் பேரணி திங்கள்கிழமை இரவு நீடாமங்கலம் வெண்ணாற்று பாலக்கரை பகுதியை வந்தடைந்தது. அந்தக் குழுவினருக்கு மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில், நீடாமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர்கள் அண்ணாதுரை, மாயவநாதன், நகரச் செயலாளர் ஆர். ராஜசேகரன், வழக்குரைஞர் சோம. செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ராணிசேகர் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்று திறந்த வேனில் நின்றபடி பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai