Enable Javscript for better performance
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கப் பேரவைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கப் பேரவைக் கூட்டம்

    By DIN  |   Published on : 12th April 2018 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் ஒன்றிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கப் பேரவைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சோம. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். விவசாயச் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். நாகூரான், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கே. கைலாசம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் டி. அண்ணாதுரை, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 9-ஆவது மாநில மாநாடு குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. 
    வலங்கைமான்: இதேபோல், வலங்கைமான் ஒன்றிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராதா தலைமை வகித்தார். விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ். கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே. சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பாலையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    9-ஆவது மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai