Enable Javscript for better performance
கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டுப் பேராசிரியர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி,  குடவாசலில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாயிலில்  நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கிளை தலைவர் முனைவர் ஜான்பீட்டர் தலைமை வகித்தார்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தமிழக பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டுப் பேராசிரியர்களையே துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மீத்தேன், காவிரி போன்ற மக்களையும், அவர்களது வாழ்வுரிமையையும் பாதிக்கும் திட்டங்களை அரசு கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்தில்,  சங்கத்தின் கிளை செயலாளர் தேஷ், பொருளாளர் ரமேஷ்குமார், பேராசிரியர்கள் சுரேஷ், சகாயராஜ் மற்றும் கல்லூரியின் அனைத்து பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai