Enable Javscript for better performance
காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 12th April 2018 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
    பாமக நகரச் செயலர் கல்விபிரியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கொள்கைப் பரப்புச் செயலர் கவிஞர் முருகையன் கண்டன உரையாற்றினார். இதில், பாமக  மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணிய ஐயர், தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்க மாநிலத் தலைவர் நெல். ஜெராமன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் வந்தடைந்தனர். ஆர்ப்பாட்த்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள்எழுப்பப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai