Enable Javscript for better performance
சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில், புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்டத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
    அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். இதில் சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தமிழழகன், மாவட்ட இணைச் செயலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    வட்டாரச் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி மாறுதல் கலந்தாய்வு தேதியை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai