Enable Javscript for better performance
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முத்துப்பேட்டை ஆசாத் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
    மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமை பேச்சாளர் தாவூத் கைசர் காவிரி மேலாண்மை வாரியத்தில் அவசியம் மற்றும் இதில், இஸ்லாமியர்களின் பங்கு குறித்து பேசினார். இதில், ஆசாத் நகர் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ், நூர் பள்ளி கிளைத் தலைவர் குவைத் அன்சாரி, நிர்வாகிகள் நஜிபுதீன், ஜெகபர்சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai