Enable Javscript for better performance
திருவாரூர் மைய நூலகம் வந்த மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு சுற்றுலா வந்த மாணவர்களுக்கு வாசிப்பின் பெருமைகள் குறித்து புதன்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.
    நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், காத்தான்குடி ஊராட்சி அய்யூர் தொடக்கப்பள்ளி  மாணவ, மாணவியர் 50 பேர், திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு சுற்றுலாவாக புதன்கிழமை வந்தனர். நூலக சுற்றுலா வந்த மாணவர்களுக்கு நூலகத்தின் சிறப்பு சேவைகள் குறித்து நூலகர் ஆசைத்தம்பி கூறினார்.
    மேலும் குழந்தைகள் நூலகம், நூல்கள் வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பின் பெருமைகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.
    நிகழ்ச்சியில் நூலகர் சு. வடிவேலு, அப்பள்ளி தலைமையாசிரியர் எ. கருணாமூர்த்தி, மைய நூலகப் பணியாளர்கள் வீரச்செல்வம், த. ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai