Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 12th April 2018 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடைகாலத்தை முன்னிட்டு, நீடாமங்கலத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் பேரூராட்சி அலுவலகம் உள்பட அரசின் பல்வேறு அலுவலகங்கள், வங்கிகள், ரயில் நிலையம்  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும், அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும், வர்த்தகர்களும் பேருந்துகள் மூலம் வெளியூர் சென்று வருகின்றனர்.
    நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் இல்லாததால், நகரில் 3 இடங்களில் பேருந்துகள் நின்று செல்கின்றன. அந்த 3 பகுதிகளிலும் பயணிகள் நிழற்கூரை இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கோடை மற்றும் மழைக்காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
    தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் பேரூராட்சியில் 3 இடங்களில் தற்காலிக ஏற்பாடாக பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai