Enable Javscript for better performance
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மன்னார்குடியில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சீனி. தனபாலன் தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி, முன்னாள் மாவட்டச் செயலர் பு. கங்காதரன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கே. ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். இதில், மாவட்ட இளைஞரணிச் செயலர் லெ. செந்தில்குமார், நகரத் தலைவர் வே. மோகன், முன்னாள் மாவட்ட இளைஞரணிச் செயலர் இள. சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai