Enable Javscript for better performance
அண்ணா பதக்கம் பெற்ற தனிப்பிரிவு ஆய்வாளருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா பதக்கம் பெற்ற தனிப்பிரிவு ஆய்வாளருக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 13th April 2018 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற்ற மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பாராட்டுத் தெரிவித்தார்.
    திருவாரூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக டி. இலக்குமணன் பணியாற்றி வருகிறார். இவர், 2000 ஆவது ஆண்டில்  தமிழக காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து சட்டம், ஒழுங்கு, தனிப்பிரிவு போன்ற நுண்ணறிவு பிரிவுகளில் பணியாற்றிய காலத்தில் திறன்பட செயல்பட்டதால், தமிழக அரசு சார்பில் போலீஸாருக்கு வழங்கப்படும் அண்ணா பதக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஏப். 4-இல் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அண்ணா பதக்கம் வழங்கினார். அண்ணா பதக்கம் பெற்ற இவருக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் பாராட்டுத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai