Enable Javscript for better performance
அரசு மருத்துவமனை குறைபாடுகளை கண்டித்து போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனை குறைபாடுகளை கண்டித்து போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு

    By DIN  |   Published on : 13th April 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளருமான வி.எஸ். கலியபெருமாள் வியாழக்கிழமை கூறியது:
    நீடாமங்கலத்தில் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 
    24 மணி நேரமும் இயங்க வேண்டிய  இந்த மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 3 பேர் மட்டுமே உள்ளனர்.  காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். மற்ற நேரங்களில் செவிலியர்களே மருத்துவச் சிகிச்சையளிக்கின்றனர். 
    உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்படுபவர்களுக்கு பெரும்பாலும்  முதலுதவி சிகிச்சையளித்து, தீவிரச் சிகிச்சைக்காக மன்னார்குடி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர். இரவு நேரத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை.
    இந்த அவல நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai