Enable Javscript for better performance
ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
    இதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குரு பகவான் மற்றும் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர்,கெஜலட்சுமி, உத்ஸவ தெட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து  தெய்வங்களின் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai