Enable Javscript for better performance
இளம்பெண் சாவில் சந்தேகம்: பெற்றோர் புகார்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே திருமணமாகி  இரண்டரையாண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளனர்.
     பரவாக்கோட்டை திலகர்வீதியைச் சேர்ந்த ஞானசிகாமணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மேலத்தெரு ராமலிங்கம் மகள் பவித்ராவுக்கும் (23) கடந்த இரண்டரையாண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதுதொடர்பாக குடும்பத்தில் பிரச்னை இருந்துவந்ததாம்.
    இந்நிலையில் பவித்ரா, புதன்கிழமை மாலை வீட்டில் தனியே இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரவாக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் போலீஸார் பவித்ராவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
     இதுதொடர்பாக, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில், பெண்ணின் தாயார் தனபாக்கியம் அளித்த புகாரில், பவித்ரா சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai