Enable Javscript for better performance
கூத்தாநல்லூர் வட்டத்தில் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து  எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டத்தில் திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து  எதிர்ப்பு

    By DIN  |   Published on : 13th April 2018 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட திமுகவினர், பிரதமர் மோடியைக் கண்டித்து வியாழக்கிழமை கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    இதில், கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் எஸ்.எம். காதர் உசேன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.வி.பி. செந்தில்நாதன், நகர இளைஞரணி செயலாளர் எம்.எம். ரைசின் பாசில், தொண்டரணி அமைப்பாளர் பி. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இதேபோல் லெட்சுமாங்குடி, அத்திக்கடை, பொதக்குடி, சேகரை, மரக்கடை, குடிதாங்கிச்சேரி, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, வடமாதிமங்கலம், பூதமங்கலம், வேளுக்குடி உள்ளிட்ட இடங்களிலும், திமுகவினர் கருப்புக் கொடியை ஏற்றி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai