Enable Javscript for better performance
திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப்பெருவிழா 17-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப்பெருவிழா 17-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 13th April 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடவாசலை அடுத்த திருவீழிமிழலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீழிநாதசுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்.17- ஆம் தேதி தொடங்கி ஏப். 28 வரை நடைபெறவுள்ளது.
    தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற இக்கோயிலில் விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அகத்தியர், வசிஷ்ட்டர் உள்ளிட்டோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர் என்பது ஐதீகம். காத்தியாயினி என்னும் திருப்பெயருடன் விளங்கிய உமாதேவியாரை இறைவன் திருமணம் செய்து ஊர் என்னும் பெருமையைப் பெற்ற இத்தலத்தில் சுவாமி-அம்பாள் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
    மேலும், சம்பந்தரும், நாவுக்கரசரும் பஞ்சகாலத்தில் இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, பஞ்சம் போக்கியதாக வரலாறும் இக்கோயிலுக்கு உண்டு. இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்.17- ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடக்கிறது.
    ஏப்.17- ஆம் தேதி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கும், திருநாவுக்கரசு நாயனாருக்கும் படிக்காசு வழங்கும் நிகழ்வுடன் விழா தொடங்குகிறது. 19-ஆம் தேதி திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.  தொடர்ந்து, தினந்தோறும் வீதியுலா பெறவுள்ளது.
    விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான திருமுலைப்பால் உத்ஸவம் ஏப். 20-ஆம் தேதியும், திருக்கல்யாணம்  24-ஆம் தேதியும், ரதோத்ஸவம் 26-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தீர்த்தவாரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai