Enable Javscript for better performance
நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு சட்ட சேவை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு சட்ட சேவை முகாம்

    By DIN  |   Published on : 13th April 2018 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தமிழக அரசின் அனைத்துத் துறைகள் சார்பில், பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சட்ட சேவை முகாம் மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரைய்யா தலைமை வகித்தார்.
    இதில், அரசுத்துறைகள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் சட்டம் சார்ந்த மற்றும் இதர நலத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நலத்திட்டங்களைப் பெற்றிட தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது, திட்டங்கள் பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதிச்செய்வது, பொதுமக்களின் சட்டத் தேவைகளைத் தெரிந்துகொள்ளவும், சட்டப் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
    முகாமில், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி கோவிந்தராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சோமசுந்தரம், மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் விஜயன், அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    குற்றத்துறை அரசு உதவி வழக்குரைஞர் நிலை-1, மு.பொற்செல்வி, வழக்குரைஞர் சு. சிங்காரவேலு ஆகியோர் பேசினர். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 9 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    விழாவில், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, வட்டாட்சியர் ஸ்ரீதேவி சிவானந்தம், அரசு வழக்குரைஞர் வி.கே. கோபாலகிருஷ்ணன், அரசு கூடுதல் வழக்குரைஞர் ஆர். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai