Enable Javscript for better performance
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 13th April 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில்,  பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார்குடியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில், மேலப்பாலம், வாடகை லாரிகள் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம். ராஜ்குமார் தலைமை வகித்தார்.
     இதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு எதிராக கோஷமிடப்பட்டது.
     லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் ஜி. சாமிநாதன், பொருளாளர் எஸ். செந்தில்குமார், ஓட்டுநர் நலச் சங்கத் தலைவர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில் சங்க துணைத் தலைவர் சேட்டு கணேசன், துணைச் செயலர் ராஜா, ஓட்டுநர் சங்கச் செயலர் கார்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்புக் கொடியை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai