Enable Javscript for better performance
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: வீடு, கடைகளில் கருப்புக் கொடி- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: வீடு, கடைகளில் கருப்புக் கொடி

    By DIN  |   Published on : 13th April 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் கடை மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி வியாழக்கிழமை கட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வியாழக்கிழமை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக வீடு மற்றும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றுவது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், வியாழக்கிழமை  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தன. திருவாரூரில் பெரும்பாலான கடை மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. இதேபோல், திருவாரூர் அருகே கூடுர் பகுதி கடைகள், வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டிய பொதுமக்கள் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai