Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து பேரணி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், பிரதமர் மோடி சென்னை வருகையை எதிர்த்தும், குடவாசல் வட்டம் எரவாஞ்சேரியில் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மணவாளநல்லூர் சாலை வளைவில் தொடங்கியப் பேரணிக்கு குடவாசல் திமுக ஒன்றியச் செயலாளர் ஜோதிராமன் தலைமை வகித்தார். பேரணி எரவாஞ்சேரி கடைத்தெரு வழியாக பெரியார் சிலை வரை நடைபெற்றது. பின்னர்,  அங்கு மத்திய அரசு மற்றும் பிரதமரைக் கண்டித்து கோஷமிட்டனர். இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai