Enable Javscript for better performance
மன்னார்குடியில் கருப்புக்கொடியேற்றி ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்குடன் நடந்துகொள்வதைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்துக்கு பிரதமர் வந்த வியாழக்கிழமையை, துக்க நாளாக அனுசரிக்கும் வகையில், மன்னார்குடியில் பல்வேறு அரசியல் கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி கட்டப்பட்டு, ஊர்வலம் நடைபெற்றது.
     காந்திஜீ சாலையில் உள்ள நகர திமுக அலுவலகத்திலிருந்து, கட்சியின் நகரச் செயலர் வீரா. கணேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர், இருசக்கர வாகனத்தில் கருப்புக் கொடியுடன், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் கட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர்.பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில், கருப்புக் கொடியேற்றி வைக்கப்பட்டது. 
    இதேபோல், மகா மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன்பு, கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி, கருப்புக் கொடியேற்றினார். ஆசாத்தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் வளாகத்தில், அக்கட்சியின் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் கருப்புக் கொடியேற்றினார்.
    இதேபோன்று, பெரியக்கடைதெருவில் தந்தை பெரியார் படிப்பகத்தில்,திராவிடர் கழக நகரச் செயலர் மு. ராமதாஸ், கருப்புக் கொடியேற்றினார்.
    மேலும், மன்னார்குடி மட்டுமன்றி கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai