மோடிக்கு எதிராக நீடாமங்கலத்தில் கருப்புக் கொடி
By DIN | Published on : 13th April 2018 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடியைக் கண்டித்து நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
அதன்படி, தி.மு.க. மாணவரணி மாநில முன்னாள் இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில், வர்ததகர் சங்கத்தலைவர் பி.ஜி.ஆர். ராஜாராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சந்துரு, நகர த.மா.கா. தலைவர் ராஜன் ரமேஷ், காங்கிரஸ் நிர்வாகி பாபு உள்ளிட்டோர் கடைவீதியில் உள்ள கடைகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : நீடாமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் சோம. ராஜமாணிக்கம் கருப்புக் கொடி ஏற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்.