Enable Javscript for better performance
ரஜினிகாந்தின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    ரஜினிகாந்தின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

    By DIN  |   Published on : 13th April 2018 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடிகர் ரஜினிகாந்த்தின் ஐபிஎல் போட்டி குறித்த கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கூறியது: சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தினர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போராட்டக் குழுவினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதை கொச்சைப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் போராட்டக்காரர்கள் காவல் துறையினரை தாக்கியது வன்முறையின் உச்சகட்டம் என தெரிவித்துள்ளார்.
    ஆந்திராவில் 20 தமிழர்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றபோதும், சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை தாக்குதல் தொடுத்தபோதும், மதுபானத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்களை காவல்துறையினர் தாக்கியபோது ரஜினிகாந்த் எவ்வித கருத்தும் கூறவில்லை. ஐபிஎல் போட்டிக்கு எதிராகவோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காகவோ ரஜினிகாந்த் போராடவில்லையென்றாலும், இவற்றுக்கு எதிராக போராடியவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai