Enable Javscript for better performance
"வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் உச்சத்தை அடையலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் உச்சத்தை அடையலாம்'

    By DIN  |   Published on : 13th April 2018 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்காமல் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் உச்சத்தை அடையலாம்   என்றார் காவல் துறைத் தலைவர் (லஞ்ச ஒழிப்புத் துறை ) எஸ். முருகன்.
    திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில், ஆண்டு விழா மலரை வெளியிட்டு மேலும் அவர் பேசியது: இளம் வயதில் நான் இப்படி ஆவேன் என்று கனவு காண்பவர்கள் பின்னாளில் காணாமல் போய் விடுகிறார்கள்.
    சிறுவயதில் போலீஸாக ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. சிறு வயதில் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே மாணவர்களுக்கு எதிரிகளாக தெரிவர். ஆனால், நம்முடைய வளர்ச்சிக்கு முழு முதல் காரணம் அவர்களே. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
    நான் பள்ளியில் படிக்கும்போது கணக்கில் 35 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தேர்ச்சிப் பெற்றேன். அப்போது என்னை மடைமாற்றியவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களுமே. என்னுடன் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். நான் திருவிக கல்லூரியில் சேர்ந்தேன். பின்னாளில் நான் பணியில் சேர்ந்தபோது, ஆரம்ப சுகாதார ஆய்வாளர்களுடனான கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தேன். அவர் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். எனவே, தலைவர்களோடு மேடையில் அமர்வதும், கூட்டத்தினராக அமர்வதும் நீங்கள் செய்யும் முயற்சிகளில் அடங்கியுள்ளது.
    முயற்சியோடு கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்காமல் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்வில் உச்சத்தை அடையலாம். 
    சாதனை என்பது கடினமான காரியம் அல்ல. சோதனை என்பதில் உள்ள ஒற்றைக் கொம்பை நீக்கினால் சாதனை. இந்த வாக்கியத்தில் நீக்குவது என்பது நாம் செய்யும் முயற்சியே. 
    மாணவர்களாகிய நீங்கள் முயற்சியுடன் நல்ல செயல்களில் ஈடுபட்டால் இதே மேடையில் உங்களுக்கான இடம் காத்திருக்கிறது என்றார் காவல் துறைத் தலைவர் (லஞ்ச ஒழிப்பு) எஸ். முருகன். 
    கல்லூரி முதல்வர் (பொ) து. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் நந்தலாலா, வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் வீ. விவேகானந்தம், இணைப் பேராசிரியர் சீ. தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai