இனாம்கிளியூரில் பாலங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா: அமைச்சர் பங்கேற்பு
By DIN | Published on : 14th April 2018 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், இனாம்கிளியூர் ஊராட்சியில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியே 59 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் மூன்று பாலங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தெய்வநாயகி முன்னிலை வகித்தார். விழாவில், உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
இனாம்கிளியூரில் ரெங்கநாதபுரத்தில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 64 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் ஒரு பாலமும், இனாம்கிளியூர் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 67 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் ஒரு பாலமும், நடுப்படுகையில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடியே 27 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் ஒரு பாலமும் ஆக மொத்தம் ரூ.4 கோடியே 59 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் மூன்று பாலங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 15 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறுவர் என்றார்.
விழாவில், வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டச் செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.