Enable Javscript for better performance
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏப்.18-இல் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏப்.18-இல் ஏலம்

    By DIN  |   Published on : 14th April 2018 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏப்ரல் 18-ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமல் பிரிவு) ஆர். ஜான் ஜோசப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட மதுவிலக்குக் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள் மீது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொது ஏலம் நடைபெறுகிறது.
    6 நான்கு சக்கர வாகனங்கள், 28 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 34 வாகனங்கள் பங்கேற்கும் இந்த பொது ஏலமானது,  ஏப்.18-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai