சுடச்சுட

  

  அனைத்து சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரயில் வழித் தடங்களில் கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலர் மனோகரன் கூறியது: கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மண்டல அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோஹானி ரயில்வேயில் சுற்றுலா வாய்ப்புள்ள பாதைகளை கண்டறிய உத்தரவிட்டதை தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன. 
  கோராபுட்-ராயகடா பாதை, சிலிகுரி நியுமால்- ஹசிமாரா பாதை, வாஸ்கோடாகாமா- லோன்டா பாதை, மண்டபம் -ராமேஸ்வரம் பாதை, ஜம்மு- உதம்பூர் பாதைபோன்றுசுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல அகல ரயில் பாதைகளும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் வகையிலும், கூடுதல் வருவாய் ஈட்டவும், மீட்டர்கேஜ் மட்டும் அல்லாமல் அனைத்துசுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பாதைகளிலும் நவீனசுற்றுலா ரயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்துகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai