Enable Javscript for better performance
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரைத் திருவிழா

    By DIN  |   Published on : 14th April 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டியில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
    வில்வாரண்யம் என அழைக்கப்படும் இக்கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அசுபதி நடசத்திர பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. 
    இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, பிறவி மருந்தீசரை வழிபட்டால், தீராத நோய்களிலிருந்து குணமடையலாம் என்பதும், திருமணமாகாத பெண்கள் தீர்த்தமாடி பெரியநாயகிஅம்பாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பதும் ஐதீகம்.
    இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில், சித்திரைப் பெருந் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தொடர்ந்து, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வரர் உத்ஸவமும்,  சனிக்கிழமை விக்னேஸ்வரர்  மூஞ்சுறு வாகனத்தில் புறப்பாடும்,  ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையில் சுப்பிரமணியர் உத்ஸவமும் நடைபெறுகிறது.
    செவ்வாய்க்கிழமை (ஏப்.17) அப்பர்,  சம்பந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வர் வீதியுலாவும்,  புதன்கிழமை (ஏப்.18) புஷ்ப விமானத்திலும், ஏப். 19-இல் புஷ்ப பல்லக்கிலும் சுவாமி புறப்பாடு
    நடைபெறவுள்ளது.
    தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் வசந்தன் உத்ஸவம் மற்றும் இந்திர விமானம், பூத வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் போன்றவற்றில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ஏப். 24-ஆம் தேதியிலும்,  கைலாச வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஏப். 25-ஆம் தேதியும் நடைபெறுகிறது. 
    பின்னர், தீர்த்தவிடங்க தியாகராஜர் தேரோட்டம் ஏப். 26-ஆம் தேதி நடக்கிறது. மே 3-ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், 5-ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
     விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம். முருகையன், தக்கார்  மற்றும் உதவிஆணையர் த. கிருஷ்ணன், மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai