Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் மழை- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.
    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையையொட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
    திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நீடாமங்கலம் பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து சற்று இதமான சூழல் ஏற்பட்டது. இம்மழை, வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai