Enable Javscript for better performance
நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் இன்று புஷ்ப பல்லக்கு விழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் இன்று புஷ்ப பல்லக்கு விழா

    By DIN  |   Published on : 14th April 2018 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகா மாரியம்மன் கோயிலில், தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை (ஏப். 14-ஆம் தேதி) இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கு விழா நடைபெறுகிறது.
    இக்கோயிலில் தமிழ் இளைஞர் பக்தர் கழகம் நடத்தும் 33-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நாள்தோறும் மகா மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
    இதையொட்டி, சனிக்கிழமை  புஷ்ப பல்லக்கு விழா நடைபெறுகிறது. இரவு பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    தவில் வித்வான் என்.டி.எம்.எஸ். காமாட்சிசுந்தரம், நாகசுவர வித்வான்கள் என்.எம்.கே. கார்த்தி, என்.எம்.கே. கண்ணன் குழுவினரின் நாதலய சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    கோயில் விழா வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் டி. அரவிந்தன், செயல் அலுவலர் ரெ. ஐயப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள், தமிழ் இளைஞர் பக்தர் கழகத்தினர் செய்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai