Enable Javscript for better performance
போக்குவரத்துக் காவலரைத் தாக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    மன்னார்குடி போக்குவரத்துக் காவல் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருபவர் தாஜுதீன் (56). இவர், வெள்ளிக்கிழமை மாலை பாலகிருஷ்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மகாதேவப்பட்டணத்தைச் சேர்ந்த அ. வீரமுருகன் (30), நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தாராம்.
    இதையடுத்து, அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் தாஜுதீன், வீரமுருகனை மீட்டு விசாரணை செய்தபோது, குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, வீரமுருகன் மீது தாஜுதீன் வழக்குப் பதிந்தாராம். இதனால், ஆத்திரமடைந்த வீரமுருகன், கல்லால் தாக்கியதில் தாஜுதீனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மன்னார்குடி காவல்நிலைய போலீஸார் வழக்குப்  பதிந்து வீரமுருகனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai