Enable Javscript for better performance
போதையில் தகராறு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் அருகே மது போதையில் தகராறு செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
    பொதக்குடி, காந்தி காலனி பகுதியில் சிலர் அடிக்கடி மது போதையில் தகராறு செய்து வந்தனராம். இதை  அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் (43) தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த  அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன், தர்மராஜ், தமிழழகன் மற்றும் குகன் ஆகிய நால்வரும் முருகேசனை இரும்புக்  கம்பியால் தாக்கினராம். 
    இதில், படுகாயமடைந்த முருகேசன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சௌந்தர்ராஜன்(42), தமிழழகன்(25) ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பியோடிய, தர்மராஜ் மற்றும் குகனை  தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai