Enable Javscript for better performance
மன்னார்குடி நகராட்சிப் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வசதி- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி நகராட்சிப் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வசதி

    By DIN  |   Published on : 14th April 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி நகராட்சி பூங்காவில் தனியார் அறக்கட்டளை சார்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மன்னார்குடி பாலகிருஷ்ணாநகரில் உள்ள நகராட்சி கல்கி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையர் ஜி. இளங்கோவன் தலைமை வகித்தார்.
    மன்னார்குடியில் செயல்பட்டு வரும், பிரதாப்சந்த்- சுமதிபாய் அறக்கட்டளை சார்பில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில், குளிர்ந்த மற்றும் சுடுநீர் வசதியுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை அறங்காவலர் பிரதாப் சந்த், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
     நிகழ்ச்சியில் மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், அறக்கட்டளை உறுப்பினர் சுனில்லுங்கட், லயன்ஸ் சங்க மாவட்ட நிர்வாகி மருத்துவர்கள் சி. அசோக்குமார், ரவி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளி தாளாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai