Enable Javscript for better performance
மருத்துவர் வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் வீட்டில் ரூ.3.50 லட்சம் ரொக்கம் மற்றும்  ஆறரை பவுன் நகை, மருத்துவர் பதிவு சான்றிதழ் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
    மன்னார்குடி கீழ வடம்போக்கித் தெருவைச் சேர்ந்த முத்தழகன் மகன் இளஞ்சேரன் (36). மருத்துவரான இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர், அண்மை காலமாக, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது சித்தப்பா கலையரசன் வீட்டில் வசித்து வருகிறார்.
    இந்நிலையில், பீரோவில் இருந்த சூட்கேஸ்சை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. அதில் ரூ. 3.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஆறரை பவுன் நகை, மருத்துவர் பதிவு சான்றிதழ் ஆகியவை இருந்ததாகக் கூறப்படுகிறது.
     இந்த திருட்டு சம்பவம் குறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai