Enable Javscript for better performance
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: 30-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    முதலமைச்சர் மாநில இளைஞர் விருது: 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 14th April 2018 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்களை ஏப்.30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, திருவாரூர் மாவட்ட  ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத் தினத்தில் 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருது ரூ. 50,000  ரொக்கம், பாராட்டுப் பத்திரம்  மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
    அதன்படி 2018-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15- ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    தகுதிகள்:  15 முதல் 35 வயதிற்குள்பட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த 2017 ஏப்ரல் முதல் தேதியன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 2018 மார்ச் 31- இல் 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதி ஆண்டில் (2017-18) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருக்க வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்).
    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய- மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
    இதுகுறித்து விண்ணப்பப் படிவம், இதர விவரங்களை திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் அல்லது  ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n    என்ற இணையதளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
    விபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஏப்.30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரிடம் அளிக்கப்படவேண்டும்.
    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-227158 தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai