மைய நூலக சாலையை சரி செய்யக் கோரிக்கை
By DIN | Published on : 14th April 2018 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்துக்குச் செல்லும் சாலையை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்ட மைய நூலகமானது, நாகை - திருவாரூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்தக் குடிமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நூலகத்துக்குச் செல்லும் சாலையானது, உரிய பராமரிப்பு இல்லாததால் குண்டும், குழியுமாக மாறி விட்டது. சுமார் 70- 80 மீ., நீளமுடைய இந்தச் சாலை சீரமைக்கப்படாததால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் அவ்வப்போது விபத்துகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே நூலக சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீர்செய்து, பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.