Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்ப் புத்தாண்டான விளம்பி  ஆண்டு  சனிக்கிழமை பிறந்தது. இதையொட்டி,  திருவாரூரில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை முதல் பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம்  செய்தனர். சில கோயில்களில் சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு திருவிழாக்கள் நடைபெற்றன.
     குவளைக்கால் மாரியம்மன் கோயில், பெருகவாழ்ந்தான் மாரியம்மன் கோயில், பொரசக்குடி  அய்யனார்  கோயில், பெருமாளகரம் செடில் மாரியம்மன் கோயில், விடயபுரம் மகாமாரியம்மன் கோயில், செருவாமணி ஆலயடி மாரியம்மன் கோயில், திருத்துறைப்பூண்டி திரெளபதி மாரியம்மன் கோயில், பாலையக்கோட்டை பாலமா காளியம்மன் கோயில், சொரக்குடி அய்யனார் கோயில், நீலக்குடி செளந்தரியம்மன் கோயில், குன்னூர் ஆகாச மாரியம்மன் கோயில், குரும்பல் வீரகாளியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் சாத்தகுள மாரியம்மன் கோயில், அகரமனக்கால் பள்ளிவாசல் தெரு பாலநாகம்மாள் கோயில், கொக்காலடி முத்துமாரியம்மன்  கோயில்  உள்ளிட்ட  கோயில்களில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
     இதேபோல் விட்டுகட்டி நல்லமுத்து மாரியம்மன் கோயில், வடகண்டம் அய்யனார் கோயில், எண்கண் சுப்ரமணிய சுவாமி கோயில், கும்மிட்டி திடல் மகாமாரியம்மன் கோயில், சித்தமல்லி வீரனார் கோயில், கர்த்தநாதபுரம் மாதா கோயில், கோவில்வெண்ணி மகா மாரியம்மன் கோயில், பூவாநத்தம்  மாரியம்மன் கோயில், கிடாரங்கொண்டான் ஆலடி மகாசக்தி மாரியம்மன் கோயில், ஆண்டிப்பாளையம் பூங்காளியம்மன் கோயில், சேந்தமங்கலம் செல்லமுத்து மாரியம்மன் கோயில், அகரகொத்தங்குடி ராக்கைய்யா அய்யனார் கோயில், கொத்தவாசல் மாரியம்மன் கோயில், இஞ்சிக்குடி அய்யனார் கோயில்,  அரித்துவாரமங்கலம்  காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai