Enable Javscript for better performance
பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

    By DIN  |   Published on : 15th April 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சியில், சட்டப் பேரவை  உறுப்பினர் ப. ஆடலரசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ( பொறுப்பு) ச . நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை- மன்னை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு அஞ்சலி மற்றும் தீ தொண்டு வார விழா நிலைய அலுவலர் (பொ) நெடுஞ்செழியன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
    இதில், தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள் நாகசுந்தரம், சொக்கலிங்கம், பிரபாகரன், முகம்மது நவாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai