Enable Javscript for better performance
அரசியலமைப்பு எழுச்சி நாள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் அரசியலமைப்பு எழுச்சி நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அம்பேத்கர் இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வழக்குரைஞர் தமிழ் ஸ்டாலின்பாரதி  தலைமை வகித்தார். 
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
    இக்கூட்டத்தில் இந்த அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், அதில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு குறித்தும் பேசினர். மேலும், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai