Enable Javscript for better performance
ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே ஆற்றில் வேன் கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்பட 6 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை வரை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சார்பில் பூமிக்கடியில் கேபிள் பதிக்கும் பணியை விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது. இதற்கான கூலித்தொழிலாளர்கள் மன்னார்குடியை அடுத்த தலையாமங்கலத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
    ஞாயிற்றுக்கிழமை 5 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, சுமை வேன் ஒன்று மன்னார்குடி- முத்துப்பேட்டை பிரதான சாலை, உரத்தூர் பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாமணியாற்றில் கவிழ்ந்தது.
    இதில், ஓட்டுநர் கோட்டூரை அடுத்த வேதபுரம் அருள் (26), கூலித்தொழிலாளர்கள் செஞ்சியைச் சேர்ந்த செல்வம் (26), ராஜேந்திரன் (58), சுப்பராயன் (55), முருகன் (45), கோகுலக்கண்ணன் (25) ஆகிய 6 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    பின்னர் மேல் சிகிச்சைச்சாக முருகன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி
    வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai