Enable Javscript for better performance
கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

    By DIN  |   Published on : 16th April 2018 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, ஆட்டோ தொழிலாளர்கள் சங்கப் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
    கூத்தாநல்லூர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கக் கூட்டம், பேரணி மற்றும் கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    கூத்தாநல்லூர் ரேடியோ பூங்காவிலிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் பிரதான சாலை வழியாக மரக்கடை ஆட்டோ நிறுத்தம்  வரை நடைபெற்றது. பின்னர் அங்கு, ஆட்டோ தொழிலாளர்கள் சங்க  சி.ஐ.டி.யு.கொடியை, சங்க மாவட்ட துணைத் தலைவர் நா. பாலசுப்ரமணியன் ஏற்றிவைத்தார்.
    தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு, கூத்தாநல்லூர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் டி. வீரமணி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ். வாஞ்சிநாதன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.கே. செல்வம்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் எம். ராஜேந்திரன் வரவேற்றார்.
     தீர்மானங்கள்: கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள கூத்தாநல்லூர் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். லெட்சுமாங்குடி பிரதான சாலையை  ஒரு வழிப் பாதையாக மாற்றியமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். கூத்தாநல்லூரில் போக்குவரத்து காவல் பிரிவை ஏற்படுத்த வேண்டும். கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம்  உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai